நேத்து நரேஷ் ரூம்க்கு போயிருந்தேன். ஏதாவது இன்னொவேட்டிவா பண்ணனும்னு அவன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும் ஒரு ஐடியா க்ளிக் ஆச்சு. அதாவது, இப்போ யாரோட மொபைல் போன்க்கு கால் பண்ணும் போது, நமக்கு சினிமா பாட்டு கேட்டற மாதிரி வசதி காலர் டியூன்ஸ் / ஹலோ டியூன்ஸ்ல இருக்கு. அதையே இன்னொரு கொஞ்சம் மாத்தி, யாருக்காவது போன் பண்ணினா விளம்பரம் கேட்குற மாதிரி வசதி பண்ணலாம். இதுக்கு ஈடா மாசா மாசம் ஒரு 30 இல்ல 50 ரூபாய் டாக்டைம் அந்த மொபைல் சப்ஸ்க்ரைபருக்கு சர்வீஸ் ப்ரொவைடர் கொடுக்கலாம். எந்த மாதிரியான பொருட்களுக்கான விளம்பரங்கள் வரலாம்னு மொபைல் சப்ஸ்க்ரைபரே தேர்ந்தெடுக்கும் வசதியும் வெக்கலாம்.
இன்னக்கி இல்லன்னாலும் வெகுசீக்கிரம் இந்த ஊடகம் பிரபலம் ஆகும்....