Sunday, July 29, 2007

குறி பாத்து சுடுங்கடா, டேய்!





"பூமா" - ஒரு மல்டிநேஷனல் கம்பெனின் விளம்பரத்தில், இந்திய கம்பெனியான "மாருதி ட்ரூ வேல்யூ"வின் லோகோ எப்படி?
1. பூமா கம்பெனி காதுல பூவ சுத்திட்டு, ஏதோ ஒரு சப்ப விளம்பர கம்பெனி இந்த விளம்பரத்தை டிசைன் பண்ணியிருக்கனும். இல்ல,
2. பூமா கம்பெனியே, பரவால்ல இந்த லோகோக்கு நல்ல மரியாதை இருக்கு. நம்மளும் இத சுட்டு பயன்படுத்திக்கலாம்னு நினைச்சிருக்கனும். இல்ல,
3. உண்மையாவே இந்த லோகோ மாருதியுடையதுன்னு, பூமாவிற்கும், விளம்பரக் கம்பெனிக்கும் தெரியாம இருக்கனும்....
குறி பாத்து சுடுங்கடா, டேய்!

Wednesday, July 25, 2007

சுப லாபம்



எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. நீங்கள் மட்டும் பயனடையுங்கள்.... இந்த மாதிரி வசனத்துக்கல்லாம் ஏமாற யாரும் தயாரா இல்ல.

"We Share our our profits with you..."
எங்களுக்கு கிடைக்கும் லாபத்தை உங்களுக்கு பகிர்ந்தளிக்கிறோம்னு சொன்னா நம்ப வாய்ப்பிருக்கு....

Monday, July 23, 2007

வந்துச்சிடா வாழ்வு....


இந்த ஆன்லைன் விளம்பரத்துல தமிழ் படும் பாட பாருங்க...

சிவசங்கர்கிட்ட கொஞ்ச நாள் முன்னாடி தான் சொல்லிட்டு இருந்தேன், இன்டெர்நெட்ல தமிழ் மற்றும் மற்ற இந்திய மொழி சம்மந்தமான வேலைகள் / தொழில்கள் / பிஸினஸ்கள் அதிகரிக்கும்னு. அதாவது பொழுதுபோக்காக அல்லது சிந்தனைகளை வெளிப்படுத்த எழுதுவவர்கள் அல்ல. இதை தொழிலாக செய்பவர்கள், உதாரணம் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் ப்ரூஃப் ரீடர்கள் வேலைக்கான தேவை அதிகரிக்கும்....

Friday, July 20, 2007

இப்ப என்னா சொல்ல வர்ற...

ஓட்டல் சர்வர் மற்றும் விவசாயி... இவங்க கைக்கு எட்டுவது வாய்க்கு எட்டாது...
சர்வர் எல்லாத்துக்கும் வகையான சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடுக்குறான், ஆனா அவனுக்கு அத்தைனயும் சாப்பிடக் கொடுத்துவக்கல....
விவசாயி பொன்னி, ஜீரகம்னு பயிர் பண்ணி பணக்காரங்க சாப்பிடகொடுக்கிறான், அவனுக்கு கொடுத்துவக்கல...

இப்ப என்னா சொல்ல வர்ற...

Sunday, July 15, 2007

மன்னிச்சிக்குங்க போலீஸ்கார்...

தெரியாமத்தான் கேக்குறேன்னு ரொம்ப டூமச்சா கேள்வி கேட்டுட்டேன். மன்னிச்சிக்குங்க போலீஸ்கார்...

இந்த போட்டோவ பாருங்க...



நம்ம கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசு எப்படில்லாம் திருடு போற வாய்ப்பு இருக்குன்றத படம் போட்டு காமிச்சிருக்காங்க... இதப்படிச்சாவது நம்ம மக்கள் உஷாரா இருக்காங்களான்னு பாக்கனும். இந்த கிரியேட்டிவான ஐடியாவ பண்ணின டீமுக்கு பாராட்டு! பாராட்டு! பாராட்டு! மக்கள்ட நல்ல பேர் வாங்க இதே மாதிரி இன்னும் நிறைய பண்ணனும், போலீஸ் மேல நம்பிக்கைய கொண்டு வரனும்....