பேச்சு வழக்கில்:
என்னய பாத்தா மணிக்கூண்டு மாதிரி தெரியிதா இல்ல அலாரம் மாதிரி தெரியுதா... ராத்திரி சாப்பிட பேறப்பல்லாம் எதுத்த வீட்டு வாட்ச்மேன் என்கிட்ட டைம் கேக்குறான்... எப்படி அதே போஸ்ல மனுஷன் டெய்லி உக்காந்துருக்கானோ தெரியல...
தமிழில்:
என்னைப் பார்க்கையில் மணிக்கூண்டு போலவோ அல்லது விழிப்பான் போலவோ அவனுக்குத் தெரியலாம். இரவு உணவுக்காக தினமும் நான் போகையில் எதிர் வீட்டு காவலாளி, என்னிடம் மணி கேட்கிறான். எப்படி தினமும் ஒரே நிலையில் அமர்ந்திருக்க முடிகிறதோ அவனால்?
கவிதை நடையில்:
வரி வரியா அடுத்தடுத்து எழுதுவதும் கவிதை
குழம்பிய குட்டையில்
கல் எரிவதுன்
பொழுதுபோக்கா?
பல சிந்தனைகளாய்
கால் நடக்கிறேன்.
குறிபார்த்து கேட்கிறாய்
என்னையே தினமும்.
"மணி என்ன?".
நிதம் நான்
வருகிற நேரம்
உனக்கெப்படி சரியாகத்
தெரிந்திருக்கிறது?
கடிகாரம் இருக்காது
உன்னிடம்.
ஆனாலும் நீ
எதிர்வீட்டு "வாட்ச்"மேன்.
ஹைக்கூ வடிவில்:
இன்றும் என்னிடம்
மணி என்னவென்று
கேட்டார் "வாட்ச்"மேன்.