வெறுமனே ஏதாவது எழுதனும்னு நினை நிணை நினைத்தேனுக்கு எத்தனை சுழின்னு கூட மறந்து போய்டுச்சு. சரி தமிழை மறக்காம இருக்கவாவது எழுதலாம்.
Friday, November 20, 2009
நாளை முதல் நான் அற்பனில்லை..
காய்கறி வாங்கி வர அண்ணாநகர் கோவை பழமுதிர் வரை அருணும் நானும் போயிருந்தோம். பெங்களூர் கமெர்சியல் ஸ்ட்ரீட்டில் பார்த்த National Geographic's Bring Your Own Bag (BYOB) Campaign ஞாபகம் வர, துணிக்கடைகளில் கொடுக்கும் பையை எடுத்துச் செல்ல நினைத்திருந்தேன். நினைத்ததோடு சரி, போகையில் மறந்துவிட்டேன். பைகளை எடுத்து வருபவர்களுக்கு இரண்டு ரூபாய் தள்ளுபடியை, இதுபோன்ற காய்கறி கடைக்காரர்களும், ஸ்பென்சர்ஸ், மோர், ரிலையன்ஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்களும் தரலாம். பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறையும். சாக்கடைகளும் மழைநீர் வடிகால்களும் அடைத்துக்கொண்டு ஊர் நாறுவது பிளாஸ்டிக் பைகளால் தான். இரண்டு ரூபாய் தள்ளுபடி தருவதைவிட பிளாஸ்டிக் பைக்கு ஐந்து ரூபாய் வீதம் கூடுதலாக வசூலித்தால் Bring Your Own Bag நடைமுறைக்கு வரும். அதுவரை பிளாஸ்டிக் பையை கடைக்காரன் ஓசியாத்தரானே என்று வெறுங்கையை வீசிக்கொண்டு கடைக்கு வரும் அற்பங்களை நொந்துகொள்ள முடியாது.
Subscribe to:
Posts (Atom)