Tuesday, December 11, 2007

ஆரம்பிசிட்டாங்கடா இங்கையும்

இங்கிலிஸ்காரன் மாதிரி டிரஸ் பண்றது மட்டுமில்ல... புதுச ஒண்ணும் ஆரம்பிச்சிருக்கோம் இப்ப நாங்க.... Boy shoots classmate...
8th grader took dad's gun...

Tuesday, November 06, 2007

மணி கேக்குறானாம் மணி

பேச்சு வழக்கில்:

என்னய பாத்தா மணிக்கூண்டு மாதிரி தெரியிதா இல்ல அலாரம் மாதிரி தெரியுதா... ராத்திரி சாப்பிட பேறப்பல்லாம் எதுத்த வீட்டு வாட்ச்மேன் என்கிட்ட டைம் கேக்குறான்... எப்படி அதே போஸ்ல மனுஷன் டெய்லி உக்காந்துருக்கானோ தெரியல...



தமிழில்:

என்னைப் பார்க்கையில் மணிக்கூண்டு போலவோ அல்லது விழிப்பான் போலவோ அவனுக்குத் தெரியலாம். இரவு உணவுக்காக தினமும் நான் போகையில் எதிர் வீட்டு காவலாளி, என்னிடம் மணி கேட்கிறான். எப்படி தினமும் ஒரே நிலையில் அமர்ந்திருக்க முடிகிறதோ அவனால்?



கவிதை நடையில்:
வரி வரியா அடுத்தடுத்து எழுதுவதும் கவிதை

குழம்பிய குட்டையில்
கல் எரிவதுன்
பொழுதுபோக்கா?
பல சிந்தனைகளாய்
கால் நடக்கிறேன்.
குறிபார்த்து கேட்கிறாய்
என்னையே தினமும்.
"மணி என்ன?".

நிதம் நான்
வருகிற நேரம்
உனக்கெப்படி சரியாகத்
தெரிந்திருக்கிறது?
கடிகாரம் இருக்காது
உன்னிடம்.
ஆனாலும் நீ
எதிர்வீட்டு "வாட்ச்"மேன்.



ஹைக்கூ வடிவில்:

இன்றும் என்னிடம்
மணி என்னவென்று
கேட்டார் "வாட்ச்"மேன்.

Monday, October 08, 2007

இன்னோரு ஹைக்கூஉஊ...



தாழப் பறக்கும்
தட்டான்பூச்சி...
முகத்தில் மழைத்துளி.

Tuesday, August 28, 2007

சிறந்த அறுபது புத்தகங்கள்?

இந்திய சுதந்திரதிற்கு பிறகு எழுதப்பட்ட சிறந்த அறுபது புத்தகங்கள் என்ற வரிசையில், சுந்தர ராமசாமி அவர்களின் "ஜே ஜே : சில குறிப்புகள்" மற்றும் பாமா அவர்களின் "கருக்கு" ஆகிய இரு தமிழ் நூல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இது, தரவரிசைப்படுத்திய அருந்ததி ராய் அவர்களின் அறிவுக்கு எட்டிய வரை மட்டுமே. அவருக்குத் தெரியாத எத்தனையோ சிறந்த பல நூல்கள் தமிழிலும் மற்ற மொழிகளிலும் இருக்ககூடும். *Conditions Apply என்றொரு Disclaimer கட்டுரையின் முடிவில் வைத்திருக்கலாம்.
(இவ்விரு தமிழ் நூல்களையும் படிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.)

Wednesday, August 15, 2007

சாமியே நீதான் நாட்டக் காப்பத்தனும்

இன்று சுதந்திர தின விடுமுறைங்கறதால திருவண்ணாமலை கிரிவலம் வரலாம்னு இரவு 12.00 மணிக்கு பஸ் புடிச்சி கிளம்பினோம். நரேஷும் நானும். கிரிவலம் வருவதாக ஒரு வேண்டுதல். தள்ளிப்போகக் கூடாதுங்கறத்துக்காக போய்ட்டுவந்தேன். நரேஷும் வந்ததால நல்லபடியா முடிஞ்சி வந்த்தாச்சு.
ராஜகோபுரம் வழியா நுழைந்ததும் வலது புறத்துல என்ன விக்ரகம்னு கவனிக்க மறந்துட்டேன்.

ஆனா அந்த சாமி தான் நாட்டக் காப்பத்தனும்.


திருவண்ணாமலை புது பஸ் நிலையம் எதிரில் உள்ள கல்லறையில் கண்டது...
செத்தவங்களாயாவது சொகமா இருக்க விடுங்களேன். அதுல சேரு இது சேருன்னு... வேற எடமே இல்லயா விளம்பரம் பண்ண....