Wednesday, May 30, 2007

பயோமெட்ரிக் கிரெடிட் கார்ட்

ஒரு மீட்டிங்காக லேட்டாய்டுச்சேன்னு அவசரமா வண்டில போய்கிட்டு இருக்கும் போது, பாக்கெட்ல போன் அடிக்குது. வண்டிய ஓரங்கட்டிட்டு எடுத்துப்பாத்தா எதோ லாண்ட்லைன் நம்பர். சந்தேகத்தோட தான் ஆன்ஸர் பண்ணேன். "சார், எச் எஸ் பி சீ ல இருந்த்து கால் பண்றேன். லைப்டைம் ஃப்ரீ கார்டு ஆஃபர் பண்றோம்." ப்ளீஸ் வேண்டாம் என்ன விட்ருங்கன்னு சொல்லிட்டு கிளம்பினேன்.

கொஞ்ச தூரம் போனதும் ஒரு ஐடியா தோணிச்சு! ப்ளாஸ்டிக் கார்டுக்கு பதிலா பயோமெட்ரிக் கார்டு தந்தா என்ன. கடைங்கள்ல வெறும் நம்மோட கைரேகைய ஸ்கான் பண்ணி, பணம் செலுத்தற மாதிரி இருந்தா எப்படி இருக்கும்... இதிலயே ஆன்லைன் ஷாப்பிங், ஏடிஎம்ல அப்புறம் மத்த கடைங்கள்லயும் வெச்சா நல்லா இருக்கும்.

முதல்ல, நம்ம கார்டை வேற யாரும் திருட்டுத்தனமாக பயன்படுத்துறதை தவிர்க்கலாம்.

ரெண்டாவது, ஒவ்வொருத்தரும் பர்ஸ் நெறைய 10 - 20 கார்ட் வெச்சுக்கனும்னு அவசியம் இருக்காது. நம்ம கைரேகையே எல்லா கார்டுக்கும் ஒரே அடையாளம்.

மாஸ்டர் கார்டு, வீசா கார்டு அப்புறம் ஆமெக்ஸ்ல வேள செய்ற மூலக்காரனுங்க இதெல்லாம் யோசிக்காமலா இருப்பாங்க. அப்படி இல்லான்னா, சபீர் பாட்டியா, கூகுள், ஆர்குட் இல்ல யூ ட்யூப் மாதிரி டெக்னோப்ரெனருங்க சீக்கிரமே இதயும் செய்வாங்க சீக்கிரமே...

Saturday, April 28, 2007

இன்னக்கி World Cup Final...

இன்னக்கி wold cup final...
Pointing - Jayavadane foto பாத்துக்கிட்டிருந்த்தப்ப தோனியது...

செய்தித்தாள் விளையாட்டுப்பக்கத்தில்
சச்சின் படம்
Canon Camera விளம்பரம்.


எப்படி நம்ம ஹைக்கூஉஊஊ......

Saturday, March 17, 2007

புதுசு என்றாலும்...

"புதியது" என்ற வார்த்தை, எத்தனை நூற்றாண்டுகள் பழையது....

Wednesday, March 14, 2007

நான் எங்க போவேன்?

அவ நெனப்புல
அழுததை நெனச்சா
சிரிக்கத் தோணுது!

அவளோட சேந்து
சிரிச்சத நெனச்சா
அழுவயா வருது!

பாவி மக! இப்ப
சிரிக்கிறாளோ? அழுகுறாளோ?
அவ சிரிச்சிகிருந்தா சொர்க்கம்;
அழுதா நரகம் போவேன்!

-
-
-
வேற ஒருத்தன கல்யாணம் பண்ணாலும் அவ நல்ல இருக்கணும்னு வேண்டிக்கிறோமே, அவளவிட ஒரு நல்ல பொண்ணா நமக்கு கிடக்கணும்னு எவளாவது யோசிப்பாளா?

Wednesday, January 03, 2007

மகாபாரதம். பாடியவர்: மரண கானா விஜி

"நீ பெருசுங்கிறே, அவன் சிறுசுங்கிறே...
நீ வஸ்தாதுங்கிறே, அவன் பிஸ்கோத்துங்கிறே,
செத்தா எவன் எங்க போவான் யாருக்குத் தெரியும்?
நிலையில்லாத வாழ்வுடா, நினைத்துப் பாரு மானுடா,
நாலு பேரு சொமக்குறான், நடுவில் ஒருவன் படுக்குறான்,

மாண்டு போன மனிதனே...
மரணம் சொகமா இருக்குதா?
தூக்கிச் சொமக்கும் மனிதனே...
சாவு சொமையா இருக்குதா?
இன்னிக்கிவர செத்தவனும் பதில் சொல்லல,
மத்தவனும் பதில் சொல்லல..."


மரண கானா விஜி சாவுக்கு படிக்கிற கானா இது.

சி. இராஜகோபாலாச்சாரி அவர்களின் மகாபாரதம் 5 வருஷம் முன்னாடி படிச்சிட்டு, எங்க அம்மாயிக்கிட்ட நான் சொன்னது இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. இதப் படிச்சவன் எவனும் சக மனுஷனோட சண்ட போட மாட்டான்னு. திரும்ப படிக்கனும்னு ரொம்ப நாளா புத்தகத்த தேடிக்கிட்டிருக்கேன். மேல இருக்க கானா பாட்ட ஆனந்தவிகடன் 27.12.06 இதழ்ல படிச்சதும் மகாபாரதம் படிச்ச அதே உணர்வு.