இந்த மாதிரி விளம்பரம் தினமும் நியூஸ்பேப்பரில் வருவதை பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள். என்ன தோன்றியது இதைப் பார்க்கும் போது? எனக்கு இந்த விளம்பரம் பார்க்கும் போது நிறைய சந்தேகங்கள் எழுந்தன.முதலில், ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கும் போது, தவணையைக் கட்டத் தவறினால், இதுபோல் வாடிக்கையாளர்களின் வராலாறு அம்பலப்படுத்தப்படும் என்பது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிரிக்குமா?
இரண்டாவது, கடனை வசூலிக்கும் முறை: கடனாளியை அவரின் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தி வசூலிப்பது கந்துவட்டிக்காரர்களின் பாணி. வங்கிகள் "நாணயம் தவறிய கடன் தாரர்கள்" என்று விளம்பரப்படுத்துவதும் அதே நோக்கில் தானே. என்ன வித்தியாசம் கந்துவட்டிக்காரனுக்கும் வங்கிகளுக்கும். கடனை வசூலிப்பதில் தவறில்லை. அதற்கு இது மட்டுமே வழியில்லை. மாற்று வழியை என்னிடம் வங்கிகள் கேட்டால், அவை வங்கிகளில்லை.
மூன்றாவது, பத்திரிக்கைகள் இதைப்பற்றி அமைதியாக இருப்பது. அவர்களுடைய விளம்பர வருமானம் பாதிக்கப்படுமோ?
No comments:
Post a Comment