

சென்னையில் ஹோர்டிங்களில், தினத்தந்தி பேப்பரில் இந்த விளம்பரங்களைப் ஒரு வாரமாகப் பார்க்க முடிகிறது. தினத்தந்தி, மாலைமலர் குழுமத்தைச் சேர்ந்த "ஹலோ FM"ன் விளம்பரம். இந்த விளம்பரதை வெளியிட்டிருக்கும் FM ரேடியோவிற்கு முதுகெழும்பு இல்லாததையே இவ்விளம்பரம் தெளிவுபடுத்துகிறது. ரஜினிகாந்த், கமல் போன்ற ஹீரோக்களின் Brand Equityயை கள்ளத்தனமாக பயன்படுத்தி அவர்கள் முதுகில் சவாரி செய்ய நினைத்திருப்பது அற்பத்தனம். இந்த விளம்பரத்தைத் தயாரித்திருக்கும் பிரபலமான விளம்பர கம்பெனியில் கற்பனை தீர்ந்துவிட்டதா இல்லை "ஹலோ FM" குழுமத்தின் ரசணை இவ்வளவு மட்டமானதா?
1 comment:
///// ஹலோ FM" குழுமத்தின் ரசணை இவ்வளவு மட்டமானதா?
இல்லங்க, அவங்க தரம் இவ்வளவு மட்டமானது.
Post a Comment