Sunday, December 30, 2007

கர்த்தர் தாமே எனக்கு முன்பாக போகிறவர்.

கர்த்தர் தாமே எனக்கு முன்பாக போகிறவர்.




அவர் எப்போது கார் ஓட்டக் கற்றுக்கொண்டார்?

குறிப்பு: பைபிள் வசனங்களையோ கர்த்தரையோ நான் விமர்சிக்கவில்லை.

Wednesday, December 19, 2007

எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்!

ரென்டு நாளாவே நல்ல மழை. இப்பவும் மழை விடாததால கீழ இருக்க மளிகை கடையில போய் ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கி சாப்பிட வேண்டிய நெலமை.

"அந்த மில்க் பிக்கீஸ் பிஸ்கெட் குடுங்க"
"..."
"இது பிரிட்டானியா தான", எக்ஸ்பையரி டேட்டைப் பார்த்துக்கிட்டே கடக்காரர்ட்ட கேட்டேன்.
அவர் ஒரு மாதிரி பாக்கவும், "பாக்கெட்லாம் மாத்திட்டாம் போல" என்று மீதி சில்லரையை வாங்கிட்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்து ஆசையா பாக்கெட்ட பிரிச்சா உள்ள வேற ஏதோ புது டிசைன்ல கட்டங்கட்டமா இருக்குது.



எங்க என்னோட பழைய பிஸ்கெட்ட காணோமேன்னு கூகுள்ல தேடும் போது கிடச்சது.



சுத்தி பூப்போட்டு நடுவுல "BRITANNIA" அப்படீன்னு எழுதிருக்கும். அம்மா அஞ்சு பிஸ்கெட் குடுத்தா கொஞ்சகொஞ்சமா பூவ முதல்ல சாப்பிட்டுட்டு அப்புறம் நடுவுல சாப்புடுற சுகம் இப்ப இருக்க சின்ன பசங்களுக்கு கிடைக்காது. நானா இல்ல என் தம்பியா, யாரு ரொம்ப நேரம் அந்த அஞ்சு பிஸ்கெட்ட சாப்பிட்டோம்ங்கிறது தான் கிளைமாக்ஸ்.

சிறுகதை எழுதுவது எப்படி?

இன்று தினமலரில் (சென்னை பதிப்பு) பக்கம் 5ல் ஒரு செய்தி:

"அரசு விரைவு பஸ் டிக்கெட் முன்பதிவு தீவிரம்; பயணிகளை திசை திருப்ப புரோக்கர்களும் முகாம்"




செய்தியெல்லாம் சரிதான். அதில் ஒரு சிறுகதையும் சேர்த்து செய்தியை சுவாரசியமாக்கியிருக்கிறார்கள்.

பெண்களை அங்கு உரசியதகவோ அல்லது சீண்டுவதகாவோ யாரும் புகார் கூறியதற்கான சான்று அளிக்கப்படவில்லை. வெறும் போட்டோகிராபர் கொண்டு வந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு, ஆபீஸில் அமர்ந்தே கொஞ்சம் கற்பனை கலந்து எழுதப்பட்ட செய்தி இது என்பது என் கருத்து.




மேலும் அத்தகைய சந்தர்ப்பங்களில் அவ்வாரு செய்யக் கூடிய ஒரு ஆணின் கற்பனையாகவே இதை எடுத்துக் கொள்ள முடியும்.

குறிப்பு: இரண்டு வருடங்களாக நான் தினமலர் வாசகன். இந்த செய்தியை எழுதியவர் யாரென்பது எனக்கு தெரியாது. அவர் மீது எனக்குத் தனிப்பட்ட விரோதமோ அல்லது தொழில் விரோதமோ கிடையாது. இதை ஒரு வாசகனின் கருத்தாக தினமலர் எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். ஆட்சேபித்தால் மேலுள்ள இரு படங்களையும் எடுத்துவிடுகிறேன்.

Saturday, December 15, 2007

எம்ஜியார் செக்கிழுத்தாரா?

சின்னப்பிள்ளத்தனமா இருக்கு! கீ போர்டு இருக்குங்கறத்துக்காக என்ன வேணும்னாலும் டைப் பண்ணிடறதா? எம்ஜியார் செக்கிழுத்தாரா இல்ல மஞ்சளரைச்சி கொடுத்தாரா? எப்படிடா சொல்லாலாம் நீங்க அவரு சுதந்திர போராளின்னு?



இவர்தான் அது!

Wednesday, December 12, 2007

உயர் அதிகாரி: நிர்வாண படம்

இன்னக்கி எக்கனாமிக் டைம்ஸ்ல இந்த கார்ட்டூன் பாத்தேன்.




எல்லா பாஸுமே இப்படி தான் இருப்பாங்க போல. நம்ம பாயிண்ட கொஞ்சம் சத்தமா சொன்னா தப்பாயிடுது. அதுக்குன்னு புடிச்சி தொங்கிக்கிட்டு இருக்கனுமா என்ன?

பேசத்தெரிஞ்சவங்க

ஒரு லட்ச ரூபாய் காரை மட்டந்தட்ட நினைச்சிருக்காரு சுசுகி. அதுக்கு நேக்கா பதில் குடுத்திருக்காங்க டாடா. பேசத்தெரிஞ்சவங்க.

In a veiled criticism of Tata Motors’ proposed Rs1 lakh car, Suzuki said the quest for lower pricing should not lead to a compromise in quality and safety norms. "In case there is a sacrifice on safety and emission norms, the manufacturer does not truly soldier the responsibility of an auto manufacturer,” he said.

Reacting to Suzuki’s remarks, a Tata spokesperson said: "As an auto manufacturer of more than 60 years' standing, Tata Motors is conscious of its responsibilities, and all its vehicles have met and will meet all the norms and regulations of the countries where they are marketed.

Source: Hindustan Times

Tuesday, December 11, 2007

ஆரம்பிசிட்டாங்கடா இங்கையும்

இங்கிலிஸ்காரன் மாதிரி டிரஸ் பண்றது மட்டுமில்ல... புதுச ஒண்ணும் ஆரம்பிச்சிருக்கோம் இப்ப நாங்க.... Boy shoots classmate...
8th grader took dad's gun...