"அரசு விரைவு பஸ் டிக்கெட் முன்பதிவு தீவிரம்; பயணிகளை திசை திருப்ப புரோக்கர்களும் முகாம்"
செய்தியெல்லாம் சரிதான். அதில் ஒரு சிறுகதையும் சேர்த்து செய்தியை சுவாரசியமாக்கியிருக்கிறார்கள்.
பெண்களை அங்கு உரசியதகவோ அல்லது சீண்டுவதகாவோ யாரும் புகார் கூறியதற்கான சான்று அளிக்கப்படவில்லை. வெறும் போட்டோகிராபர் கொண்டு வந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு, ஆபீஸில் அமர்ந்தே கொஞ்சம் கற்பனை கலந்து எழுதப்பட்ட செய்தி இது என்பது என் கருத்து.
மேலும் அத்தகைய சந்தர்ப்பங்களில் அவ்வாரு செய்யக் கூடிய ஒரு ஆணின் கற்பனையாகவே இதை எடுத்துக் கொள்ள முடியும்.
குறிப்பு: இரண்டு வருடங்களாக நான் தினமலர் வாசகன். இந்த செய்தியை எழுதியவர் யாரென்பது எனக்கு தெரியாது. அவர் மீது எனக்குத் தனிப்பட்ட விரோதமோ அல்லது தொழில் விரோதமோ கிடையாது. இதை ஒரு வாசகனின் கருத்தாக தினமலர் எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். ஆட்சேபித்தால் மேலுள்ள இரு படங்களையும் எடுத்துவிடுகிறேன்.
No comments:
Post a Comment