உன் கோபம் நியாயமானது தான்.. இல்லங்கல.. மொத்தத் தமிழ் பத்திரிக்கைகளும் நீ பக்கம் பக்கமா எழுதித் தள்ளுறதப் பத்தி ஒரு பத்து வார்த்தைகக் கூட எழுதல.. எல்லாவனும் சேந்து உனக்கெதிரா சதி பண்ணுறானுங்க.. ஆனா அதுக்காக "விக்கியில் பொன்னியின்செல்வனுக்கே வெண்முரசை விடப்பெரிய பக்கம் உள்ளது." அப்படின்னு நீ சொல்றது தப்பு. அது என்ன 'கே'? பொன்னியின் செல்வன் என்ன மட்டமா? உனக்கு உன் எழுத்து பெருசு.. அடுத்தவன் எழுத்த நீ என்ன குறைச்சு சொல்றது? அதும் செத்தவன் எழுத்தின எழுத்தப் பத்தி.. எத்தன லட்சம் பேர் படிச்சுருக்கான்.. எத்தன லட்சம் பேர் திரும்பத் திரும்ப படிச்சுருக்கான்.. உன்னோடத அத்தன பேர் மெச்சுவானா? கோவம் வந்தா என்ன வேணா எழுத்திடுறதா?
No comments:
Post a Comment