Wednesday, December 19, 2007

எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்!

ரென்டு நாளாவே நல்ல மழை. இப்பவும் மழை விடாததால கீழ இருக்க மளிகை கடையில போய் ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கி சாப்பிட வேண்டிய நெலமை.

"அந்த மில்க் பிக்கீஸ் பிஸ்கெட் குடுங்க"
"..."
"இது பிரிட்டானியா தான", எக்ஸ்பையரி டேட்டைப் பார்த்துக்கிட்டே கடக்காரர்ட்ட கேட்டேன்.
அவர் ஒரு மாதிரி பாக்கவும், "பாக்கெட்லாம் மாத்திட்டாம் போல" என்று மீதி சில்லரையை வாங்கிட்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்து ஆசையா பாக்கெட்ட பிரிச்சா உள்ள வேற ஏதோ புது டிசைன்ல கட்டங்கட்டமா இருக்குது.



எங்க என்னோட பழைய பிஸ்கெட்ட காணோமேன்னு கூகுள்ல தேடும் போது கிடச்சது.



சுத்தி பூப்போட்டு நடுவுல "BRITANNIA" அப்படீன்னு எழுதிருக்கும். அம்மா அஞ்சு பிஸ்கெட் குடுத்தா கொஞ்சகொஞ்சமா பூவ முதல்ல சாப்பிட்டுட்டு அப்புறம் நடுவுல சாப்புடுற சுகம் இப்ப இருக்க சின்ன பசங்களுக்கு கிடைக்காது. நானா இல்ல என் தம்பியா, யாரு ரொம்ப நேரம் அந்த அஞ்சு பிஸ்கெட்ட சாப்பிட்டோம்ங்கிறது தான் கிளைமாக்ஸ்.

No comments: