நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்
நல்லவருக்கு நாம் செய்த உதவி கல் மேல் எழுத்து போல நீடித்துக் காணப்படும் என்றும், ஈரமிலாத நெஞ்சத்தார்க்கு செய்த உதவி நீர் மேல் எழுத்துப்போல் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதில் எனக்கு சந்தேகம் என்னவெனில், காணப்படும் என்பது யாரால்? உதவி பெறுபவராலா, உதவி செய்யும் நம்மாலா அல்லது ஒரு மூன்றாம் நபராலா?
உதவி பெறுபவர் நாம் செய்த உதவியை நினைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறில்லையா? நாம் பிறருக்கு ஒரு கையால் செய்த உதவி மறு கைக்கே தெரியக்கூடாது என்றெங்கேயோ படித்த ஞாபகம். அப்படியிருக்க, நாம் அதை கல்மேல் எழுத்துபோல நினைத்துக்கொண்டேயிருக்கலாமா? நாம் பிறருக்கு செய்த உதவி மூன்றாமவருக்கு தெரியலாமா?
நான் கேட்பது சத்தியமாக விவாதமல்ல. என் தேடலுக்கான விடை. தயவு செய்து என்னை தெளிவடையச் செய்யவும்.
2 comments:
In our college days we went to gujarat and also few eye camps, and other govt schools in village..Can I publicise this by putting in my Resume...NO...Definitely Not!.
A SERVICE IS NOT A SERVICE ONCE ITS MENTIONED.Expecting something and if u help someone I dont define that act as help...
நண்பரே!
நியாயமான சந்தேகம்தான்!
இது உலக உண்மை,
'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே' என்கிறது கீதை.
அதற்கு இப்படித்தான் அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து..'கடமையைச் செய்து கொண்டே இரு; பலனை நீ எதிர்பார்க்காவிடினும் அது உன்னைத்தேடி ஓடி வரும்'.
இதுதான் பிராக்டிகல்!
இந்த ஏட்டுச் சுரைக்காய்தான் கரிக்கு உதவும்!
இது என் கருத்தே, மாற்றுக்கருத்து இருப்பவர்கள் சொல்லலாம்..
Post a Comment