(அண்ணா நகர் 12வது மெயின் ரோடு 3வது ஆட்டோ ஸ்டேண்டு)
"இந்தாப்பா ஆட்டோ அப்பல்லோ வருமா?..."
ட்டுர்ர்ர்ர்ர்... ட்டுர்ர்ர்ர்ர்...
"பாத்து என்னய புடிச்சி உக்காந்துக்க. இவனுங்க ஓட்டுற ஓட்டுல..."
ட்டுர்ர்ர்ர்ர்... ட்டுர்ர்ர்ர்...ட்டுர்ர்ர்...
(சாந்தி காலனி சிக்னல் 11 10 9 8 7 6 5 4 3 2 1)
ட்டுர்ர்ர்ர்ர்... ட்டுர்ர்ர்ர்...ட்டுர்ர்ர்...
"இப்பிடிதான் மூணு வருஷம் முந்தி உங்கப்பா 110 ரூபாய ஆட்டோல மிஸ் பண்ணிட்டாராம். இவனுங்கள நம்பவே கூடாது."
ட்டுர்ர்ர்ர்ர்... ட்டுர்ர்ர்ர்...ட்டுர்ர்ர்...
"எதுக்குப்பா இப்படி சந்து சந்தா சுத்தற... காசு நான்ல தர்றேன்."
ட்டுர்ர்ர்...
(கீழ்பாக் சிமெட்ரீ ரோடு)
"இவங்க மீட்டர்ல வெக்கற சூட்ல தான் இன்னைக்கு வெயில் 45 டிகிரிய தொடுது."
ட்டுர்ர்ர்ர்...ட்டுர்ர்ர்...
(சங்கம் தியேட்டர் எதிரில் அப்பல்லோ)
"அம்மாடி ஒருவழியா வந்துட்டான்டி. எவ்ளோப்பா ஆச்சி?..."
"நம்ம வண்டி பிரசவத்துக்கு இலவசம்மா..."
அம்மாவும் பெண்ணும் வாயடைத்து நின்றனர்.
7 comments:
Good one Thyagarajan.. This is definitely a character/incident that honors the auto drivers..
I have one doubt for a long time... Is the concept "பிரசவத்துக்கு இலவசம்" that you see among most of the auto drivers came before Baadsha film? Or after that?
In either way, I would say that it is a great service by the auto drivers for the poor people..
மிகச் சிறந்த படைப்பு.
பின்னூட்டம் பற்றி கவலை கொள்ள
வேண்டாம்.
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
சென்ஷி
ட்டுர்ர்ர்ர்ர்ர்...
நல்ல திருப்பம்!
நன்றாக இருக்கிறது.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சிறுகதைனா இப்படித்தான் இருக்கணும். நச்சுன்னு.
வாழ்த்துக்கள்.
ரகு, சென்ஷி, சிந்தாநதி, ஓகை மற்றும் பேட் நியூஸ் இந்தியா அவர்களுக்கு என் நன்றிகள்.
நவம்பர் மாத போட்டியில் ஒன்பதாவது இடம் கிடைத்திருக்கிறது. வாக்களித்தவர்களுக்கு நன்றி.
Post a Comment