"எனக்கு யாரும் இல்ல. எனக்கு எந்த சந்தோசமும் இன்னமேல் தேவயில்ல. நான் இன்னைக்கு தூங்கமாட்டேன். கண்ல தண்ணி வந்தா எனக்கு தூக்கம் வராது. கஷ்டமாயிருக்கு. உன்னய கஷ்டப் படுத்தியிருந்தா மன்னிச்சிக்க."
-நான் மறுக்கையில் உன் பதில்.
" 'சுதா விஜய்' இல்ல 'சுதா விஜயகுமார்'. என் பேர் எப்படி வெச்சா உனக்குப் பிடிக்கும்? நீ எது சொல்றியோ. உன் இஷ்டம். எனக்கு ஓகே"
-என்னையும் எனது இரு பெயர்களையும் உனதாக்கினாய்.
" லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ - சுதா விஜய்."
-காலை உன் மெஸேஜில் விழிக்கிறேன்.
"ஆமா. நான் நல்லாயில்லதான். சொல்லிட்டல்ல. எவ வேணுமோ அவகிட்ட போ."
-விளையாட்டாய் சொன்னது தெரிந்தும் பொய் கோபம் கொண்டாய்.
"எங்க பாத்தாலும் நீதான்டா தெரியிற. சொல்லுடா. நான் என்ன பண்றது. பேசாமா இங்கயே வந்துடுடா"
-எனக்கு சென்னைக்கு மாற்றலாகி ஒருவாரமாகியிருந்தது.
"ஒன்னும் டென்ஷன் எடுக்காத. நான் எப்பவும் உன்கூடதான் இருப்பேன்."
-நம் திருமணத்தைப் பற்றி பேச்செடுக்கும் போதெல்லாம் சொல்வாய்.
"டேய்! நான் அப்புறம் போன் பண்றேன்டா."
-பதிலுக்கு எதிர்பாராமல் தொடர்பைத் துண்டிக்கிறாய். சுவருக்கும், தெறித்த விழுந்த செல்போனுக்கும் வலியிருக்காது. அவைகள் காதலிப்பதில்லை.
உன் திருமண அழைப்பிதழ் கொரியரில் வந்தது. பிரித்துப் படிக்க மனமில்லை.
"சென்றதினி மீளாது மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா."
யார் எழுதினது? பாரதியாரா? அய்யய்யோ, பாரதி! உனக்குமா இந்த கொடும நடந்துச்சு!
3 comments:
Great Piece of work from you thiyagu...
Hi
ellarum therinthu irruka vendiya varikal..
இல்ல தியாகு
பாரதி என்னமோ எழுதிட்டார் எனக்கு அந்த வார்தைகளில் நம்பிக்கை இல்லை
எல்லாவற்றையும் மற்ந்து இன்று புதிதாய் பிறந்தோம்-னு எடுத்துக்க முடியாது
ஏதோ நம்முடைய வசதிக்கு அப்படி எடுத்துக்கொள்ளளாம்
எல்லாறுக்கும் ஞாபக அடுக்குகள் இருக்கு இல்லையா
இராஜராஜன்
Post a Comment